Friday, March 07, 2014

புதன்

புதன்


நன்றாக இருப்பது என்பது என்ன?

1.
புதன் சொந்த வீட்டில் இருப்பது
2.
புதன் உச்சம் பெற்று இருப்பது
3.
நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள் அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர் ஆகிவிடுவார்.

சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார்

அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம்.

30
ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும் நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும்.

25
முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும்

20
முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே தரும்

20
ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும் மோசமான பலன்களே கிடைக்கும்.

அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்

4
பரல்கள் என்பது சராசரி

3
என்பது சுமாரானது

2
ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது போய்விடும்

அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.

அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்

புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும்.

தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல!

புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால் ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன் யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா?

இல்லை!

வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன் சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும் சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத் தராது.

உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும் கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும் அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல் உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக்
கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை இருக்காது

இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில், வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில் வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி இருக்கிறது.

இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும்

இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம் அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக இருக்காது.

20
அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம் நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம் செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான் அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன் திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும் குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான்.

எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது. மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு
ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள் மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது 730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே?

வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே?

அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம் தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார்.  அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார்.

அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்!

இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.

புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

முதலில் புதனை எடுத்துக் கொள்வோம்

அவன்தான் புத்திநாதன். வித்தைகளுக்குரிய நாதன். அவன் ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான், படிப்பது மண்டையில் ஏறும். படிப்பது புரியும்
அல்லது விளங்கும். கல்விக்கு அதிபதி அவன்தான்.

வாக்கு சாதுர்யம்(பேச்சு வன்மை), சங்கீதம், ஜோதிடம், பிரசங்கம் (மேடைப்பேச்சு), யுக்தியான செயல்கள், ஓவியம், சிற்பக்கலை, வணிகம் போன்ற பல புத்தி சம்பந்தப்பட்ட செயல்களுக்கு அவனே காரகன்.

புதன் நியூட்ரல் பிளானெட். (சமநிலைக் கிரகம்) நல்லவனுடன் சேர்ந்தால் ஜாதகனின் புத்தி நல்லவிதமாக வேலை செய்யும். அதே புதன் தீயவனுடன் சேர்ந்தால் கெட்ட வழியில் வேலை செய்யும்.

அதாவது புதன் சுக்கிரனுடன் சேர்ந்தால் ஆக்க வழியில் ஜாதகன் வேலை செய்வான். அதே புதன் சனியுடன் சேர்ந்தால், ஜாதகன் ஆக்க வழிகளுக்கு எதிர்மாறான விஷயங்களில் அற்புதமாக வேலை செய்வான்.

ஜாதகத்தில் புதனும் வக்கிர நிலைமையில் (rotrograde) இருந்தாலும் புத்தி வக்கிர சிந்தனைகளில்தான் அதிகமாக ஈடுபடும்.

வக்கிர சிந்தனை என்றால் என்ன? ஒரு சின்ன உதாரணம். மாற்றான் தோட்டத்து மல்லிகையை சைட் அடிப்பான். அவள் மேல் ஆசை கொள்வான் முடிந்தால் முயற்சித்தும் பார்ப்பான். நண்பனையே போட்டுக் கொடுப்பான் பல நல்ல பண்புகள் இல்லாமல் இருப்பான்.

அதே வக்கிரபுதனுடன், வக்கிர சனியும் சேர்ந்து கொண்டால், ஜாதகன் கிரிமினல் வேலைகளை உற்சாகமாக செய்வான். அது சின்னதோ அல்லது பெரியதோ, தகாத வேலைகளைச் செய்யத்தயங்க மாட்டான்.

தகாத வேலை என்றால் என்ன? பஸ்சில் பெண்ணை உரசிப் பார்ப்பதில் இருந்து வங்கியில் போலிப் பத்திரத்தைக் கொடுத்துக் கடன் வாங்குவது வரை ஆயிரக்கணக்கான தகாத வேலைகள் இருக்கின்றன். பட்டியல் இட்டால் மாளாது. அதோடு உங்களுக்குத் தெரியாததா என்ன?

ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரமாகி இருந்தால், ஜாதகன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவான். பல அழிவு வேலைகளில் ஈடுபடுவான். ஒசாமா பின்லேடனின் ஜாதகத்தில் அப்படிப்பட்ட அமைப்பு உள்ளது என்று படித்திருக்கிறேன்.

வக்கிரம் என்றால் என்ன? ஒரு கிரகம் வானவெளியில் சில சமயங்களில் பின்புறமாகச் சுற்றும் (reverse). உதரணமாக செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் எப்போது ஓடு பாதையில் 90 டிகிரிகளுக்குள்ளேயே தங்கள் சுழற்சியை மேற்கொள்ளும். தன்னுடைய சுற்றும் வேகம் அந்த விதிக்கப்பட்ட 90 டிகிரிகளைக் கடக்கக்கூடிய நிலைமை ஏற்படுமானால், அது தன்னுடைய வேகத்தைக் குறைத்து ஏற்படப்போகும் இடை வெளியைச் சரி செய்ய பின்புறமாகச் சுழலத் துவங்கும். பிறகு தொடரும் கிரகங்கள் அந்தச் சுழற்சி இடைவெளிக்குள் வந்த பிறகு  மீண்டும் முன்புறமாகச் சுழலத் துவங்கும். அந்தப் பின்சுற்றல்தான் வக்கிரம் எனப்படும். அந்தக் காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைக் குறிக்கும் ஜோதிடர் கிரகத்தின் அருகில் () என்று குறிப்பிட்டிருப்பார்.

அப்படிக் குறிக்கத்தவறிய ஜாதகத்தைப் பார்த்து, அதைக் கொண்டு வந்த ஜாதகனுக்குப் பலன் சொல்லும்போது. அது தவறான பலனாகப் போய்விடும்.

புதனின் சொந்த வீடுகள்: மிதுனம் & கன்னி
உச்ச வீடு: கன்னி
நீச வீடு: மீனம்
நட்பு வீடுகள்: ரிஷபம், சிம்மம், துலாம்,
சம வீடுகள்: மேஷம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்
பகை வீடு: கடகம் மட்டுமே!

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் கிரகத்திற்கு 100% வலிமை உண்டு.

சம வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீச மடைந்த கிர்கங்களுக்குப் பலன் எதுவும் இல்லை!

உச்சமடைந்த கிரகங்களுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளைவையெல்லாம் நான் ஸ்கேல் வைத்து அளந்து சொல்லவில்லை அனுபவத்தில் சொல்கிறேன்

அஷ்டவர்க்கத்தை வைத்துப் புதனுக்கான பலன்கள்

புதன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 3ம் அல்லது 3ற்குக் கீழான பரல்களுடன் இருந்தால் பலனில்லை. 4 பரகளுடன் இருந்தால் சராசரிப்பலன்கள்.

புதன் 5 பரல்களுடன் இருந்தால் - அனவரிடமும் நட்பு பராட்டும் மேலான்மை உடையவனாகவும், எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலுடனும் ஜாதகன் இருப்பான்.

புதன் 6 பரல்களுடன் இருந்தால், எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.

புதன் 7 பரல்களுடன் இருந்தால் மதிப்பு, மகிழ்ச்சி, செல்வம், சொத்து சுகங்களுடன் ஜாதகன் இருப்பான்

புதன் 8 பரல்களுடன் இருந்தால் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவனாக இருப்பான்

இருக்கும் இடத்தை வைத்துப் பலன்

உதாரணத்திற்கு சிம்ம லக்கினத்தை எடுத்துக் கொள்வோம் அதுதான் சுவாமி லக்கினங்களிலேயே ஹீரோ லக்கினம். அதனால்தான் அதற்கு சிங்கத்தை அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.
சூரியனின் வீடு அல்லவா அது!

1.
சிம்ம லக்கினத்திற்கு புதன், இரண்டாம் வீடு (House of Finance, Family affairs & speech) மற்றும் பதினொன்றாம் (House of Profits - லாபஸ்தானம்) ஆகிய வீடுகளுக்கு அதிபதி. சிம்ம லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் (யோக காரகன், 4 & 9ஆம் வீடுகளுக்கு அதிபதி அவன்) எப்படி முக்கியமோ அப்படி புதனும் முக்கியமானவன். அந்த லக்கினக்காரகளுக்குப் புதன், கேந்திர, திரிகோணங்களில் இருப்பது நல்லது. குறிப்பாக ஏழில் இருப்பது நல்லது. இருந்தால் ஜாதகனுக்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை, கையில் எப்போதும் காசு பணம், மயக்கும் பேச்சுத் திறமை, செய்யும் வேலையில் அல்லது தொழிலில் அதிக வருமாணம் கிடைக்கும்.

2. 6, 8, 12
ஆம் இடங்களில் இருந்தால் எதிரான பலன்கள்

கன்னி லக்கினக்காரகளுக்கு, புதன் லக்கினாதிபதி மற்றும் பத்தாம் இடத்து அதிபதி. ஆகவே கன்னி லக்கினக்காரகளுக்கு அவன்தான் முக்கியமானவன். அவன் ஜாதகத்தில் மறையக்கூடாது (அதாவது 6, 8, 12 ஆம் இடங்களில் போய் அமர்ந்து கொண்டு சேட்டை செய்யக்கூடாது)

அப்படி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு உரிய வேலை கிடைக்காது. வாழ்க்கையில் உயர்வும் கிடைக்காது.

துலா லக்கினக்காரர்களுக்கு: 9ஆம் வீடு மற்றும் 12ஆம் வீடு ஆகிய இடங்களுக்கு உரியவன். முக்கியமாக பாக்கிய ஸ்தானத்தைக் கவனத்தில் கொள்ளவும்.

அவன் நன்றாக இருந்தால், எல்லா பாக்கியங்களையும் அவன் தேடிப்பிடித்துக் கொடுப்பான்)

விருச்சிக லக்கினத்துக்காரர்களுக்கு புதன் ஆயுள்காரகன் (8ஆம் இடத்து அதிபதி. அதோடு லாபாதியும் அவன்தான். இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து முக்கியமானவன்


தனுசு லக்கினம்: 7ஆம் அதிபதி (இல்லத்தரசி அல்லது அரசன்) 10ஆம் இடம் - தொழில் ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதி அவன் இந்த லக்கினத்துக்காரர்களுக்கு அவன் இந்த இரண்டு இடத்தை வைத்து புதன் முக்கியமானவன்

மகரம்: 6ஆம் அதிபதி மற்றும் பாக்கியாதிபதி (9ஆம் அதிபதி) புதன் பாதி வில்லன் பாதி ஹீரோ என்கின்ற நிலைமையில் புதன் இந்த லக்கின வேலைகளைச் செய்வான்

கும்பம்: 5th Lord & 8th Lord
மீனம்: 4th lord and 7th lord
மேஷம்: 3rd lord and 6th lord
ரிஷபம்: 2nd lord and 5th lord
மிதுனம்: Lagna lord and 4th lord
கடகம்: 12th lord & 3rd lord

மேற்பத்திகளில் கூறிய முறைகளிலேயே இவற்றிற்கும் பலனை உணர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment