Friday, March 14, 2014

குரு



கோச்சாரத்தில் குருவின் பலன்:

வடமொழியில் கோ என்றால் கிரகம், சாரம் என்றால் அசைதல். கிரகங்கள் இடம் விட்டு இடம் அசைந்து போவதால் ஏற்படக்கூடிய பலன்களே கோச்சாரம் எனப்படும்

கோச்சாரத்தில் 30 பரல்களுக்கு மேல் இருக்கும் வீடுகளில் பயணிக்கும் காலங்களில் குருபகவான் நன்மையான பலன்களை மட்டுமே தருவார்.

குரு ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டுகாலம் தங்கிவிட்டுச்செல்வார்

குருவின் சஞ்சார பலன்கள்!
ஏழு இடங்களில் கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்காது அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

முதல் வீட்டில்:
சாதகம் இல்லாத சூழ்நிலைகள் உள்ள காலம் (unfavourable circumstances.) நிலைதடுமாற்றங்கள். வாக்குவாதம், கலகங்கள், மந்தமான போக்குகள்
உள்ள காலம் அந்த ஒராண்டு காலம்.

மூன்றாம் வீட்டில்: மனம், மற்றும் உடல் நலக் குறைவுகள், பதவி நீக்கம் அல்லது பதவி மாற்றம். துன்பங்கள்

நான்காம் வீட்டில்: உறவுகள் மூலம் துன்பங்கள்.சுகமின்மை!

ஆறாம் வீட்டில்: சுகக்குறைவுகள்

எட்டாம் வீட்டில்: துக்கம். மரணத்திற்குச் சமமான கஷ்டங்கள்

பத்தாம் வீட்டில்: பதவி துறத்தல் அல்லது பதவியில் இடம், ஊர் மாற்றம் பண நஷ்டங்கள்.

பன்னிரெண்டாம் வீட்டில்: துக்கம், தூர தேசம் போய் வருதல் அல்லது தொலைவான இடம் சென்று வசித்தல், தனவிரையம். நிலைமாற்றம் போன்றவை இருக்கும் அந்த ஓராண்டு காலத்தில்

ஐந்து இடங்களில், கோச்சாரக் குருவினால் நல்ல பலன்கள் கிடைக்கும் அவைகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

இரண்டாம் வீட்டில்: பணவரவுகள்.

ஐந்தாம் வீட்டில்: பண லாபங்கள், புத்திரபாக்கியம், புத்திர லாபம், பெண்சுகம்.

ஏழாம் வீட்டில்: மதிப்பு மரியாதை, செல்வாக்கு கிடைக்கும் காலம் பணவரவுகள் அதிகரிக்கும் காலம்

ஒன்பதாம் வீட்டில்: மனைவி மக்கள் சுகம், தனலாபம், எடுத்துச் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் காலம்

பதினொன்றாம் வீட்டில்: மகிழ்ச்சியான காலம். நினைத்தது நிறை வேறும் அந்த ஓராண்டு சஞ்சாரத்தில்!

இந்தக் கோச்சாரப் பலன்கள் எல்லாம் நல்ல தசாபுத்திகள் நடந்தால்தான் கிடைக்கும். அதே போல குரு சுயவர்க்கத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தில் உள்ள தனது பரல்களை வைத்துத்தான் பலன் கொடுப்பார். அவருக்கு சுய வர்க்கத்தில் எட்டுப் பரல்கள் இருந்தாலும், சுற்றிவரும் இடத்தில் தன்னுடைய chartல் உள்ள பரல்களுக்குத் தக்கபடிதான் பலன்தருவார்.

பொதுவாக, குரு, 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம் மற்றும் பதினோராம் இடம் ஆகிய இடங்களில். சஞ்சாரம் செய்யும் காலங்களில் திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தைப் பேறுக்காகக் காத்திருந்தவர்களுக்குக் குழந்தையைத் தருவார். இடம், வீடு வாங்கக் காத்திருந்தவர்களுக்கு அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.

குரு பகவானின் சொந்த வீடுகள் இரண்டு: தனுசு மற்றும் மீனம்
குரு பகவானின் உச்ச வீடு:கடகம்
குரு பகவானின் நீச வீடு: மகரம்
குரு பகவானின் நட்பு வீடுகள்: மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்
குரு பகவானின் சம வீடுகள்: கும்பம் மட்டுமே!
குரு பகவானின் பகை வீடுகள்: ரிஷபம், மிதுனம், துலாம்,

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் குருவிற்கு 100% வலிமை இருக்கும்.

குருவுடன் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம் அல்லது ஏழாம் பார்வையாக சந்திரன் பார்த்தாலும், அல்லது குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5ம் அல்லது 7ம் அல்லது 9ஆம் பார்வையாகச் சந்திரனைப் பார்த்தாலும் யோகம்தான் அதற்குப் பெயர் கஜகேசரி யோகம்

சம வீட்டில் இருக்கும் குருவிற்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் குருவிற்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் குருவிற்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த குருவிற்குப் பலன் எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது. இங்கேதான், இந்த விஷயத்தில்தான் குரு மற்ற கிரகங்களில் இருந்து வேறு படுவார். நீசம் பெற்றாலும் அவர் நன்மையே செய்வார்.

எங்கே இருந்தாலும் நல்லவன் நல்லவன்தான் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே! நம் தாய் எங்கேயிருந்தாலும் நம் தாய்தான் இல்லையா? அதுபோல!

உச்சமடைந்த குருவிற்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் தராசு வைத்து எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!

குரு பகவானின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:

0
பரல் இருந்தால்: உறவுகளை இழக்க நேரிடும்

1
பரல் இருந்தால்: உடற்கோளாறுகள், உடல் நலமின்மை

2
பரல்கள் இருந்தால்: எதிலும் பயஉணர்வு, உணர்ச்சி வசப்படும் தன்மை

3
பரல்கள் இருந்தால்: காது சம்பந்தப்பட்ட நோய்கள், சக்தி வீணாகுதல், அலைச்சல்

4
பரல்கள் இருந்தால்: அதிகமான நன்மையும் இல்லை, அதிகமான தீமையும் இல்லை

5
பரல்கள் இருந்தால்: எதிரிகளைத் துவசம்செய்யும் நிலை, எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி!

6
பரல்கள் இருந்தால்: சொத்து, சுகம், வண்டி வாகனம் என்று சுகமான வாழ்க்கை!

7
பரல்கள் இருந்தால்: அதீதமான அதிர்ஷ்டம், மகிழ்ச்சி உண்டாகும்

8
பரல்கள் இருந்தால்: செல்வாக்கு, புகழ், செல்வம் எல்லாம் கிடைக்கும்

குரு இருக்கும் இடத்தை வைத்துப்பலன்:

இந்த முறை கும்ப லக்கினத்தை வைத்து உங்களுக்கு விளக்கம் சொல்கிறேன்.

கும்ப லக்கினம் எதற்கு ஐயா?

கும்பலக்கினம்தான் மென்மையான லக்கினம். சிம்ம லக்கினத்திற்கு நேர் எதிர் லக்கினம் அல்லவா?

கும்ப லக்கினம்தான் நாயகிகளின் லக்கினம். சிம்ம லக்கினம் ஹீரோ
லக்கினம் என்றால் கும்ப லக்கினம்தான் ஹீரோயின் லக்கினம்.

கும்ப லக்கினம்தான் நிறைவான லக்கினம். அதனால்தான் அதற்கு ரிஷிகள் நிறைகுடத்தை' அடையாளச் சின்னமாகக் கொடுத்தார்கள்.

கும்பலக்கினப் பெண் கிடைத்தால் யோசிக்காமல் திருமணம் செய்து கொள்ளுங்கள்

கும்ப லக்கினப் பெண்கள் என்ன செய்வது?

அவர்கள் சிம்ம லக்கினத்தைத் தேடிப்பிடிக்க வேண்டியதுதான். ஹீரோயின் ஹீரோவைத்தானே தேட வேண்டும்?

கும்பலக்கின ஆடவர்கள் நிறைவான குணங்களை உடையவர்கள் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் மகிழ்ச்சி கொள்வாள்!

கும்பலக்கினத்தை குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து பார்த்தால் ஜாதகன் லக்கியானவன் (அதிர்ஷ்டமானவன்) அல்லது லக்கியானவள் அங்கே அமரும் குரு கும்பலக்கினத்தின் இரண்டாம் வீட்டின் பலனையும், பதினொன்றாம் வீட்டின் பலனையும் ஜாதகனுக்கு அள்ளி வழங்குவான். ஜாதகனுக்கு நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், கையில் காசு தங்கும். செல்வம் சேரும். செய்யும் வேலைகளில் நல்ல பலன் இருக்கும்

கும்பலக்கினக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஆம் வீடுகளில் சென்று அமரக்கூடாது!

அமர்ந்தால் என்ன ஆகும்?

கும்பலக்கினத்திற்கு ஆறில் குரு அமர்ந்தால் அது கடக வீடு, குருபகவான் அங்கே உச்சம். இருந்தாலும் அது ஆறாம் வீடு. ஆகையால் அவரால் உரிய பலனை உரிய காலத்தில், உரிய
அளவில் தர இயலாது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை ஜாதகனுக்கு ஏற்படும்.

கும்பலக்கினத்திற்கு எட்டு மற்றும் பன்னிரெண்டாம் வீட்டில் அமரும் குருபகவானால் அதிகப் பயன் இருக்காது. இரண்டும் மறைவிடங்கள்

கும்பலக்கினத்திற்கு 4ஆம் இடமும், 9ஆம் இடமும் முக்கியமான இடங்கள். 4ஆம் வீடு சுகஸ்தானம், 9ஆம் வீடு பாக்கியஸ்தனம். இரண்டு இடங்களுமே சுக்கிரனின் வீடுகள். அங்கே சென்று குரு அமர்ந்திருந்தால் - அவருக்கு அது பகை வீடுகள். ஜாதகனுக்கு குருவினால் கிடைக்கும் பலன்கள் குறைந்துவிடும். அப்படி அமரும் போது கும்பலக்கினக்காரர்களுக்கு எந்த இரண்டு வீடுகளின் பலன்கள் குறையும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

கும்ப லக்கினத்திற்கு 3ஆம் வீடும், 10ஆம் வீடும் குருவிற்கு நட்பு வீடுகள். அங்கே அமரும் குருவால் ஜாதகன் நற்பயன்களைப் பெறுவான். 3ஆம் வீடு தைரியம், மற்றும் சகோதரன் சகோதரிகளுக்கான இடம். பத்தாம் இடம் வேலை, மற்றும் தொழிலுக்கான இடம். அவைகள் குருவால் சிறப்புறும்

கும்ப லக்கினத்திற்கு ஐந்தாம் வீடு மிதுனம். குருவிற்கு அது பகை வீடு அங்கே குரு அமர்ந்தால் ஜாதகனுக்கு ஐந்தாம் வீட்டின் அமர்ந்த குருவால் அதிகப் பலன்கள் கிடைக்காது.

No comments:

Post a Comment